Blogspot - kavisolaii.blogspot.com - கவிச் சோலை

Latest News:

மீண்டு வருமோ ..... 22 Jun 2012 | 10:58 pm

ரோஜாக்கள் பூத்திருந்த நந்தவனம் பூவொன்று வாட ஏனோ வாடி உதிர்ந்தன மற்றப் பூக்களும்... பாலைவனமாய் நந்தவனம் சீரழிய.. இன்று மீண்டுமாய் பூத்ததொரு பூ மீண்டு வருமோ என் நந்தவனம்!!!! அன்புடன் எல்கே

காதில் விழாது.... 17 Jun 2012 | 07:05 pm

பேசும் பொழுதில் உன் காதில் ஆடும் ஜிமிக்கியில் லயிக்கிறது எதிராளியின் மனம்... கண்களைப் பார்க்கையில் அதில் தீட்டப்பட்டுள்ள அஞ்சனத்தில் கரைகிறது அவன் உள்ளம்.. காதலை சொல்லும் முன் ஜிமிக்கியை கழட்டிவிடு ...

தற்கொலைக் குறிப்பு - 2 9 Jun 2012 | 12:36 pm

தென்றல் வீசியும் அடங்காமல் எரியும் உள்ளம் ... சொன்ன வார்த்தைகளின் உக்கிரம் கிளர்ந்து எழ   அடங்காமல் எரிந்துக் கொண்டிருந்தது அக்னி சூட்டில் மூளை கொதிக்க - குளிர்விக்க வழி தேடியது பார்வையில் பட்டன சி...

எனை நீ மறந்ததேனோ .. 14 Apr 2012 | 06:46 pm

காதலின் வேகத்தில் எழுந்த காமத்தின் தூண்டலில் வந்தேன் உனை அணைக்க ... ஏமாற்றமே எனைத் தழுவியது... நேரத்தில் வந்தும் எனைத் தவிர்த்து சென்றதேனோ... இதழ்களின் ஸ்பரிசத்தில் எனை மறக்க நினைத்தேன் - எனை நீ மறந...

தற்கொலைக் குறிப்பு - I 12 Feb 2012 | 06:51 pm

மீண்டுமொரு யாருமற்ற  இரவு சிலத் துளி விஷம் சில முழக் கயிறு பளபளக்கும் கத்தி இதயத் துடிப்பு குறைந்து எங்கும் நிசப்தம்.... அன்புடன்  எல்கே பி.கு. இது வல்லமையில் வந்துள்ளது.

பிரிவு 3 Feb 2012 | 04:17 pm

உன் நினைவுகள் என்னை வட்டமடித்துக் கொண்டிருக்க – உன்னைப் பிரிந்திருந்தால் குறையுமோ என நினைத்து இரு நாட்கள் நீ இல்லா தனிமையில் கழித்தேன் உன் இருப்பை விட உன் இல்லாமை – உன் நினைவுகளைத் தூண்ட ஒரு வாரப் பி...

ஆண்டுகள் ஐந்து 22 Jan 2012 | 04:46 am

கைத்தலம் பற்றி ஆகப் போகிறது ஆண்டுகள் ஐந்து  !!! முதன்முறை சந்தித்ததும் பேசியதும் இன்றும் என் செவியில் இனிய ரீங்காரமாய் !!! சிறு ஊடல்களும் ஊடலின் விளைவான காதலும் !!! கோபம் என் உடன்பிறப்பாய் இருந்தால...

உறுதிமொழிகள் 1 Jan 2012 | 08:35 pm

புதிதாய் சில உறுதிமொழிகள் - அவற்றிற்கும் பழைய உறுதிமொழிகளின் கதியே ... மீறுவோம் என்றுத் தெரிந்தே  சில உறுதிமொழிகள் ஆண்டின் இறுதிக்காய் காத்திருப்பில் ... ஜனித்த உடன் மரணிக்கும் சிசுக்களாய் பல - தப்ப...

பின்னோக்கி போகிறேன் 2 Dec 2011 | 01:18 am

முழுநிலா வானில் பவனி வர என் மனமோ உன்னை எண்ணியது  .. நிலவதில் உன் முகம் தேடினேன்- வெட்கி மேகத்தின் பின் ஒளிந்தது - அவள் முகம் என்னில் தேடாதே  நான் அழகியில்லை என சொல்லாமல் சொல்லி ... உன் சிரிப்பொலி க....

செங்கால் மடநாராய்! 24 Aug 2011 | 02:12 pm

 முத்தொள்ளாயிரம்  செங்கால் மடநாராய்! தென்உறந்தை சேறியேல், நின்கால்மேல் வைப்பன்;என் கையிரண்டும் - வன்பால் கரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரி நீர் நாடற்(கு), உரையாயோ யான்உற்ற நோய்.  சிவந்த கால்களைக் தன்னகத்த...

Recently parsed news:

Recent searches: